யாழ்ப்பாணம் பொது நூலகம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றுத் தன் உயிர் துறந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு மிகப் பழைமையான ஏடுகள் உட்ப சுமார் 97,000 நூல்கள் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.