யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்குத் தன்னை மாற்றுமாறு கோரியே இந்தக் கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று சனிக்கிழமை பகல் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இரவாகியும் தொடர்கிறது.