ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சியைப் பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகள் 2008 ஆம் கல்வி ஆண்டுக்குப் பின் பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கானோருக்கு இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அதிபர் சேவை தரம் 3க்கான ஆட்சேர்ப்பில் புள்ளியிடலுக்கான முக்கிய ஆவணமாக இச் சான்றிதழ் விளங்கும் நிலையில் சான்றிதழின் மூலப்பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றமை குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரிய கலாசாலை அதிபர்களால் வழங்கப்பட்ட பரீட்சை முடிவுகள் அடங்கிய சான்றிதழை நேர்முகத்தேர்வுக்கு ஆவணமாக சமர்ப்பிக்க முடியும் என்றும் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு கல்வி அமைச்சைக் கோரியிருப்பதாகவும் பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.