வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மதியம் இந்தச் சம்பவம் நடைபெற்றது. வீதியால் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது. பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் , அதில் ஒரு சில இ.போ.ச. ஊழியர்கள் மாத்திரம் பயணித்திருந்தனர். தெய்வாதீனமாக விபத்தில் அவர்கள் எவரும் காயமடையவில்லை.