தமிழர் விவகாரம் : அமெரிக்க காங்கிரஸ் கட்சியினருடன் கஜேந்திரகுமார் சந்திப்பு!

அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களான ”Wiley Nickel, Deborah Ross, Jamie Raskin, Danny K. Davis ”ஆகியோரைச்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கைத் தமிழர்களின் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் பிரமுகர்கள், தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!