சிறுவர்களைக் கடத்த முயன்றார் என்ற சந்தேகத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபரொருவர் யாழ்ப்பாணம் பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நாவாந்துறை ஒஸமானியாக் கல்லூரியை அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உலாவிய நபரைக் கண்காணித்த பொதுமக்கள் சிலர், சந்தேக நபர் சிறுவர்களைக் கடத்த முற்படுகிறார் என்ற சந்தேகத்தில் அவரை மடக்கிப் பிடித்தனர். யாழ்பாணம் பொலீஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலீஸார் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலீஸார் விசாரணைகளை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.