யாழ்ப்பாணம் – தமிழ்நாடு கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் மேலும் காலதாம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும், தமிழ்நாடு – காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை இன்ட்ஶ்ரீ பெரி சேவிஸ் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. எனினும் போக்குவரத்துக்கான களப் பணிகள் முடியாத நிலையில் குறித்த திகதியில் கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக இன்ட்ஶ்ரீ பெரி சேவிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்தால், எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.