குடும்பத்தைப் பிரிந்து தனித்து வாழ்ந்து வந்த ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மிருசுவில் கரம்பகம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சிவசோதி சிவகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். குடும்பத் தகராறு காரணமாகத் தன் குடும்பத்தைப் பிரிந்து தனது தோட்டத்தில் வாழ்ந்து வந்த இவர் கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகச் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.