கொண்டாட்டத்தினுள்ளும் பொறுப்புடன் நடந்த சாரணர்கள் : சென். ஜோன்ஸ் மாணவர்களின் முன்மாதிரிக்குக் குவியும் பாராட்டுகள்!

யாழ்ப்பாணம் சென் .ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியின் போது, மாணவர்களின் முன்னோடியான செயற்பாடு பலராலும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

அண்ணளவாக 2000 பேருக்கு மேல் பங்குபற்றிய இந்த விழிப்புணர்வு நடை பவனியில் கலந்து கொண்ட சில சாரணச் சிறார்கள், பேரணி சென்ற வீதிகளின் இரு மருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களைச் சேகரித்த வண்ணம் தங்களை அறியாது இவ் நடைபவணிக்கு புதியதோர் கோணத்தில் வலுச் சேர்த்திருக்கின்றார்கள். மாணவர்களின் இந்த முன்னோடியான செயற்பட்டைப் பார்த்த பலரும் தமது பாராட்டுகளைப் பகிர்ந்த வண்ணமுள்ளனர்.

அரசியல் பேரணிகள் மற்றும் போராட்டங்களின் போது, தண்ணீர்ப் போத்தலில் இருந்து வீசப்படும் கழிவுகள் வரை – அவற்றால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றிப் பெரியவர்களே சிந்திக்கத் தவறும் போது, பாரம்பரியமிக்க பண்பாட்டின் வழிவந்த இந்தச் சிறுவர்களின் முன்மாதிரிக்குத் தலை வணங்கியே ஆகவேண்டும் எனப் பெரியவர்கள் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!