இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொலை மிரட்டல்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று 21ஆம் திகதி பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரே தனக்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக இராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தொடர்பில் தான் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், அது குறித்து முஹம்மட் பைசல் ஆத்திரமடைந்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தில் CCTV கெமராக்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தி இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணையை நடத்துமாறும் பிரதி சபாநாயகரிடம் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.

எனினும் தாம் அவ்வாறு எந்தவித அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!