மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயங்கேணி கடற்கரையில் நேற்று 15 ஆம் திகதி மாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் ஒன்று கிடப்பதை கண்டு மீனவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தி யுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர் சகிதம் சென்ற பொலிசார் உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
