சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் உணர்வு பூர்வமான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – முந்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்காவில் இருந்து இன்று காலை பேரணி ஒன்று புறப்பட்டது. முற்பகல் 11 மணியளவில் செம்மணிப் பகுதியை அடைந்த அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், கோசங்களை எழுப்பியும், நினைவுச் சுடரேற்றியும் உறவுகளை நினைவு கூர்ந்ததோடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரலெழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரமுகர்கள் பலர் கட்சி பேதமேதுமில்லாமல் கலந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.


