இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தாள் இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இந்த நாணயத்தாள் இன்று முதல் இலங்கையிலுள்ள வங்கிகளின் ஊடாகப் பாவனைக்கு விடப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.


