பிரேசிலின் (brazil) தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயணிகள் பேருந்தும் டிரக் ஒன்றும் மோதியதில் 38 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மினாஸ் ஜெரைஸ் தீயணைப்புத் துறை, மேலும் 13 பேரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தது.
பேருந்து 45 பயணிகளுடன் சென்றதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை பிற்பகல், பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும், விசாரணையில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து டயர் வெடித்ததால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி மீது மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மீட்புக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
மூன்று பயணிகளுடன் வந்த காரும் பேருந்து மீது மோதியது, ஆனால் மூவரும் உயிர் அதிஷ்டவசமாக தப்பினர்.
2024 ஆம் ஆண்டில், பிரேசில் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, போக்குவரத்து விபத்துக்களில் 10,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.