யாழ்ப்பாணம், புறநகர்ப் பகுதியான கச்சேரி – நல்லூர் வீதி மூத்தநாயினார் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்குப் பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட முதலை பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக அருகில் உள்ள குளத்தில் இருந்த முதலை வீதிக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.