அறுகம்பே பகுதியில் பலமான பாதுகாப்பு!

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனக் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தமக்குக் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதனால், அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், அந்தப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான விபத்து இடம்பெற்றதாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சப்படத் தேவை இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!