களனிப் பல்கலைக்கழகத்தின் சீ.டபிள்யூ. கன்னங்கார மாணவர் விடுதியின் நான்காம் மாடியில் இருந்து விழுந்த மாணவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் களனிப் பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவரே மரணமடைந்துள்ளதாகப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணைக்காக கிரிபத்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. களனி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.