வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
புதிய ஜனாதிபதியின் கீழ் ஆளுநர்கள் பலர் தமது இராஜினாமாக் கடிதங்களை அனுப்பி வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.