ஜனாதிபதித் தேர்தல் அவசியம் – வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி!

சட்டத்தின் பிரகாரம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்

இதேவேளை மக்கள் ஆணையில்லாத தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைத்து வெகுவிரைவில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

தேர்தலில் போட்டியிடுவதற்கு எவருக்கும் உரிமையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தேர்தலில் போட்டியிடவேண்டாம் எனகூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்

இதேவேளை இலங்கை தமிழரசுகட்சி பொதுவேட்பாளர் தொடர்பாக இதுவரை தீர்மானம் எதனையம் மேற்கொள்ளவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!