இளைஞர்களை வைத்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் – சஜித்!

நாட்டில் அதிகாரம் இன்றி மக்களுக்கு சேவையாற்றும் நடைமுறையை முதன்முறையாக ஜக்கிய மக்கள சக்தியே ஆரம்பித்து முன்னெடுத்து செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார்.

குளியாபிட்டிய கட்டுபொத்த நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்,
முதன்முறையாக இளைஞர் சாசனமொன்றை முன்வைத்தது ஐக்கிய மக்கள் சக்தியே.

இவ்வருடமும் இந்த சாசனம் புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டு இளைஞர்களுடன் கைகோர்ப்பேன் வழமையான சம்பிரதாய முறையைப் பின்பற்றும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி, பாரம்பரிய அரசியல் முறைமையை மாற்றியமைத்து, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே அதிகாரம் இல்லாமல் செயலாற்றி காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சம்பிரதாய கட்சி அரசியல் கட்டமைப்புக்கு புறம்பாக, கட்சி அரசியலின் திருப்பமாக, முன்மாதிரியாக பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டங்களை ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த சேவையை ஆற்ற முடியும் என நம்புகிறேன்.

நாங்கள் வாக்குறுதிப் பத்திரங்களுக்கு மாறாக ஒரு சமூக ஒப்பந்தத்தையே உங்களுடன் மேற்கொள்கிறோம்!இந்நாட்டில் கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் இளைஞர்களின் சுதந்திரத்திற்கான சகல சட்ட ஏற்பாடுகளையும் உருவாக்கித் தருவோம்.

பிரதேச செயலக மட்டத்தில் ஆங்கிலம், சீனம், ஜப்பானிய மொழிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான இலவச கற்பித்தல் வசதிகளை ஏற்படுத்தித் தருவோம். அதன் மூலம் இளைஞர்களுக்கு பக்கபலத்தை எம்மால் வழங்கமுடியும். ஜனநாயக ரீதியாகவும் போராடுவதற்கான உரிமையையும் நாம் பெற்றுத் தருவோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!