பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு போலியான கடவுச்சீட்டு தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தில் குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிரதிக் கட்டுப்பாட்டாளரும் முன்னாள் கட்டுப்பாட்டாளரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு போலிக் கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹன பிரேமரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.