மாத்தறை – மிரிஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்திச் செல்லும் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய நபரொருவரும் 18,40 மற்றும் 55வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் ஒன்றை வெட்டியது தொடர்பில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் நேற்று (16) காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு உயிரிழந்தவர் மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.
இவர் “மாகந்துரே மதுஷ்கே” என்பவரின் உதவியாளரான “சன்ஷைன் சுத்தா”வின் நண்பர் என பொலிஸார் தெரிவித்தனர்.