மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவன் – நிலைமை கவலைக்கிடம்!

ரம்புக்கனை – எலகல்ல மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே விபத்தில் சிக்கியுள்ளார்.

இன்று காலை மற்றுமொரு மாணவர் குழுவுடன் எலகல்ல மலையில் ஏறச் சென்ற வேளையிலேயே குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளார்.

கீழே விழுந்த மாணவனை மீட்க பெரகல இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

காயமடைந்த பல்கலைக்கழக மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!