‘அலக்ஸி நவல்னியின்‘ பூதவுடல் வெள்ளிக்கிழமை நல்லடக்கம்!

”சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் (Alexei Navalny) பூதவுடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மெஸ்கோவில் அடக்கம் செய்யப்படும்” என அவரது மனைவி யுலியா(Yulia)  தெரிவித்துள்ளார்.

“அத்துடன், இறுதி ஊர்வலம் அமைதியாக நடக்குமா? அல்லது ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பது குறித்து தமக்கு உறுதியாக கூறமுடியாது” எனவும் யுலியா தெரிவித்துள்ளார்.

இதேவேளை “மெஸ்கோ மாவட்டம், மரிய்னோவில் உள்ள மரியாள் தேவாலயத்தில் இறுதி ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று நல்லடக்கம் இடம்பெறுமென”  அலக்ஸியின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அலக்ஸியின் இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!