மணல் அகழ்வை நிறுத்த கோரி யாழில் பாரிய போராட்டம்!

`யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி` பொது மக்கள் போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.

அம்பன் பிரதேச வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த 2010 ஆண்டிலிருந்து இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் நியமங்களுக்கு முரணாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!