சஜித்துடன் இணைந்தார் முன்னாள் கடற்படைத் தளபதி!

இலங்கை கடற்படையின் 14வது கடற்படை தளபதியும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதியுமான ஓய்வு பெற்ற தயா சண்டகிரி ஜக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஜக்கிய மக்கள் சக்திக்கு தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் தொடர்பான ஆலோசகராக தயா சண்டகிரியை நியமிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் 29ஆம் திகதி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பீல்மார்சல் சரத் பொன்சேகா இந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!