பெலியத்த துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது!

பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக பொலிசில் சரணடைந்ததைத் தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியொருவர் மூலம் பெலியத்த பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே குறித்த நபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அக்குரஸ்ஸ இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை சரணடைந்த சந்தேக நபர், கம்புறுபிட்டிய பிரதேசத்தில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர் கராப்பிட்டிய பிரதேசத்திற்கு குறித்த துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதற்கு உதவிய சந்தேக நபரே இவ்வாறு சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெலியத்தயில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!