வடக்கில் வறுமையினால் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் கல்வி!

வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில்” வறுமைகாரணமாக மாணவர்களின் அடைவுமட்டங்கள் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதோடு, மாணவர்களின்  அடைவுமட்டங்களை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் வன்னிமாவட்டங்களின் கல்வி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதில் ஏறப்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான், வடக்குமாகாண ஆளுனர் எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், கல்வி அமைச்சின்மேலதிக செயலாளர் காயத்திரி அபேகுணசேகர, மற்றும்பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!