நாட்டின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க என்பது 100 வீதம் உறுதியானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர நிச்சயமாக வெற்றியீட்டுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது, இது உறுதி செய்யப்பட்ட விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.