TIN இலக்கம் பெறுவதை இலகுவாக்க புதிய நடவடிக்கை

டின் இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதை இலகுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு பொதுமக்களின் தரவுகளை பேணும் அரச நிறுவனங்களினூடக இலக்கங்களை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த நிறுவனங்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று அவற்றைப் பதிவு செய்ததன் பின்னர் இலக்கம் ஒன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சட்ட சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து இந்த தகவல்கள் பெறப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!