காதலிக்காக பெண் வேடத்தில் பரீட்சை எழுதிய காதலன்!

காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது.

பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான பரீட்சையின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று பரீட்சை மண்டபத்தில் பெண்ணொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் பரீட்சை எழுதுவதை அவதானித்த கண்காணிப்பாளர்கள் அவரை பயோமெட்ரிக் உபகரணங்களிள் உதவியுடன் சோதனை நடத்தியபோது, அவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவருடைய பெயர் ஆங்ரேஸ் சிங் என்பதும் , பசில்கா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் தனது காதலிக்காகவே போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி குறித்த பரீட்சையை அவர் எழுந்த வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!