நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க வழியில்லை..! சர்வதேச கடல்களைப் பாதுகாக்கவே அதிகாரிகள் முன்னுரிமை! கர்தினால் காட்டம்

புதிய ஒருவரிடம் ஆட்சி பொறுப்பை வழங்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆராதணையில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் ஆண்டு, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குலுக்கு நீதி கோரும் போராட்டத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கவே இந்த கைக்குண்டு வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள், உயிர்த்த ஞாயிறு பண்டிகைக்கு திட்டமிட்டு தாக்குதல்களை நடாத்தியவர்கள் மற்றும் தேவாலயத்திற்குள் கைக்குண்டு வைத்த உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனதற்கும், லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் யார் காரணம் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை.

அனைத்து விடயங்களும் கம்பளத்தின் கீழ் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக சர்வதேச கடல்களைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது.

மக்கள் இந்த முறை சரியான தலைவர்களிடம் தேசத்தை ஒப்படைப்பார்கள் என்று நம்புவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!