கழிவறைக்குள் கைமாற்றப்பட்ட பெருந்தொகை பணம்..!

மக்கள் விடுதலை முன்னணியின் பலமான ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கழிவறையில் பணம் வழங்கியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே உதயங்க வீரசிங்க இந்த தகவல்களை வெளியிட்டார்

மேலும் மலிக் சமரவிக்ரம பணப்பையை சம்பந்தப்பட்ட கழிவறையில் வைத்துவிட்டு சென்றதை அடுத்து, பிரபல அரசியல்வாதியான அவர் சென்று பணப்பையை எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் தகவல் இருப்பதாகவும் ஆனால் அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பு உள்ளதால் தற்போது பெயரை வெளியிடவில்லை என்றும் உதங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!