சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள்- டயனா கமகே

இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிகிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ளதுடன் சுமார் மூன்று வருடங்களாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த சுற்றுலாத்துறை ஓரளவு ஸ்திரமான நிலைக்கு வந்துள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக, சுற்றுலாத் தளங்களின் பிரவேசப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் அதிகரித்திருக்கின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இதேவேளை வற் வரி எவ்வளவு தூரம் எமது சுற்றுலாத் துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்தும் சுற்றுலாத் துறைக்கு இந்த வற் வரி தொடர்பில் நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத் துறை அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடுகின்றார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் அவற்றை இவ்வருட இறுதியில் நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். உதாரணமாக எல்ல, பண்டாரவளை, நீர்வீழ்ச்சிகள் மற்றும் இராவணன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை போன்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!