இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகச் சட்டத்தின் படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.