வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் இன்று தன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 9:20 மணியளவில் அவர் அலுவலகப் பதிவேட்டில் உத்தியோக பூர்வமாக ஒப்பமிட்டுத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த 15 ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மே 17 ஆம் திகதி திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு மாகாணத்தில் இரண்டாவது தடவையாக ஆளுநராகப் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.