யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக அமைச்சர் டக்ளஸ்! வவுனியாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்!!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக அதே கட்சியைச் சேர்ந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரி. திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இருந்து இன்று புதன்கிழமை நியமன கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதேநேரம், கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களையும் கொள்கையையும் புரிந்து கொண்டு, அதனை வலுப்படுத்தும் வகையில் செயற்படக் கூடிய பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படும் வரை கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் பதில் தலைவராகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் செயற்படுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!