மின்கட்டண அதிகரிப்பைக் கண்டித்து இன்றிரவு வீடுகளை இருளாக்கி அடையாள எதிர்ப்புக்கு அழைப்பு!

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் அனுருத்த சோமதுங்க தெரிவித்ததாவது, இன்று – 20 ஆம் திகதி திங்கட்கழமை மாலை 7 மணிக்கு, உங்கள் வீட்டின் அனைத்து மின்விளக்குகளையும் அணைத்தும், மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியும் அடையாளபூர்வமாகப் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!