கஜேந்திரன் எம். பி கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடையை ஏற்படுத்தினர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்கு முறையைப் பயன்படுத்திய பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ். நகர மத்தியில் கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!