638 பேரின் உயிரை பறித்த டித்வா புயல்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று 9ஆம் திகதி காலை வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின் படி, 191 பேர் காணாமல் போயுள்ளனர்.

501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின் படி, அதிகளவான மரணங்களாக 234 மரணங்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில் நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், குருநாகலில் 61 மரணங்களும், கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும், புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன் 20,373 குடும்பங்களைச் சேர்ந்த 63,628 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளதாகவும், 5,354 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன்,  81,621 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!