இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று 26ஆம் திகதி களனி சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, நீர்கொழும்பு, போலவலான, மடமா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
