இவ்வார இறுதியில் வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்துக்கு உத்தியோகபூர்வமாக விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், நிதியாளர் மற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்ப மற்றும் விவசாய பீடங்களின் பீடாதிபதிகள், நிர்வாக அதிகாரிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களைச் சந்தித்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்ப மற்றும் விவசாய பீடங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மாணவர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில் மாணவர்களுடன் கலந்துரையாடி, நிலமைகளை நேரில் அறிந்து கொள்வதற்ககாகவே இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
