சுற்றுலா சென்றவர்களின் வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 6 பேர் காயம்!

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலி பகுதியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டிருந்த குழுவொன்று பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!