எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கையில்,
பெரிய வெங்காயம், கடலை, உருளைக்கிழங்கு, லங்கா சதொச பால்மா, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட முட்டை, வெள்ளை அரிசி, சோயா மீட் ஆகியவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.