யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

யாழ், தாவடி பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இளைஞர்களைப் பொலிஸார் நேற்று  கைதுசெய்துள்ளனர்.

சம்பவ தினமான நேற்று வீட்டின் உரிமையாளர் , தனது வீட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட வேண்டாம் என  குறித்த இளைஞர்களை அறிவுறுத்தியுள்ள நிலையில் ஆத்திரமடைந்த இளைஞனர்கள் , வீட்டினுள் அத்துமீறி நுழைந்து உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தகராறில் ஈடுபட்ட 06 பேரையும் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!