புற்றுநோய் மருந்து வகைகள் தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல்!

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அதிகளவு புற்றுநோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புற்று நோயாளிகளுக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 60 வீதமான மருந்து வகைகள் பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

அத்துடன் புற்றுநோய்க்கான மருந்து கொள்வனவு செய்யும் போது அவை ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்பய்பட்டவையா என்பதனை கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேலும் சட்டவிரோதமான முறையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. புற்றுநோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தரமான மருந்து வகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு  சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!