84 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே 52 வயதான இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.