இந்திய துணைத் தூதரகம் முற்றுகையிடப்படும்! யாழ்.மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.

இந்தியன் ரோலரை நிறுத்தாவிட்டால் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் குணராஜன் எச்சரித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மயிலிட்டி கடல்பரப்பில் நேற்று இரவு  ரோலர் படகு வந்ததால்  வலைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளபோதும் அதனை யாரும் செவிமடுப்பதில்லை.

இது தொடர்ந்து நடைபெற்றால் யாரையும் நடமாட விடமாட்டோம். அரசாங்கம் எங்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது.

மேலும் இத்தியா தனது கடற்படையை எல்லையில் போட்டால் அவர்களினுடைய ரோலர் இங்கு வராது எனவும் இந்திய தூதரகத்தை எதிர்வரும் செவாய்க்கிழமை 10 மணிக்கு முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!