சந்தேகத்திற்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது
அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகாததுடன், வழக்குடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுகவெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிசை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது .
மேலும் கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
