பீதுருதாலகாலமலையைப் பார்வையிட தடை விதிக்கக் கூடாது!

இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பீதுருதாலகால மலைப் பிரதேசமானது கல்வி மற்றும் சுற்றுலாத்துறையில் உயர் மதிப்பைக் கொண்டுள்ளதுடன், அதனை தொடர்ந்தும் மக்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பராமரிப்பது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!